திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:44 IST)

தமிழில் அதிகம் வசூல் செய்த திரைப்படம்: அர்ச்சனா கல்பாத்தி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் கிண்டல்

தளபதி விஜய்யின் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ 180 கோடி என்று கூறப்பட்ட நிலையில் இந்த படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்று வரை தெரியவில்லை. இருப்பினும் இந்த படம் வெற்றிப்படமா? தோல்வி படமா? போட்ட முதலீடு கிடைத்ததா? என்பது மர்மமாகவே உள்ளது
 
இந்த நிலையில் சற்று முன்னர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் தனது டுவிட்டரில் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ’பிகில்’ திரைப்படம் பெற்றுள்ளதாகவும் இந்த படம் வெளியாகி இன்றுடன் 50வது நாள் ஆவதைஅடுத்து இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த படத்தை திரையில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கும் தனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பிகில் திரைப்படம் அதிக வசூல் செய்த படமாக இருந்தால் அந்த படத்தின் வசூல் நிலவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நெட்டிசன்களீன் இந்த கோரிக்கையை அர்ச்சனா கல்பாதி நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்