வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (13:26 IST)

உதவி இயக்குனரின் படத்தைத் தயாரிக்கும் வெற்றிமாறன்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை.

அவரிடம் இருந்து விக்ரம் சுகுமாறன், மணிமாறன் மற்றும் துரை செந்தில்குமார் ஆகிய உதவி இயக்குனர்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளனர். இந்நிலையில் இப்போது அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா என்பவர் இயக்கும் படத்தை வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம்ஸ் மூலமாக தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே காக்கா முட்டை மற்றும் அனல் மேலே பனித்துளி உள்ளிட்ட திரைப்படங்களை வெற்றிமாறன் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.