1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:10 IST)

“வாடிவாசல் படத்துக்குப் பின் இந்த படம்தான்…” வெற்றிமாறன் வெளியிட்ட அப்டேட்!

வாடிவாசல் திரைப்படத்தை இயக்கி முடித்ததும் வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன என்பது பற்றிய தகவலை இப்போது வெளியிட்டுள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று  திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்துக்கான பணிகள் இப்போது தாமதம் ஆகி வருகின்றன. அதனால் சூர்யா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது பாலா இயக்கும் படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் சுர்யா கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறனும் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை முடித்ததும் வாடிவாசல் படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிவாசல் படத்தை முடித்ததும் வெற்றிமாறன் தனது அடுத்த படமாக ‘வடசென்னை 2’ திரைப்படத்தை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2018 ஆம் ஆண்டு வெளியான வடசென்னை முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக அமைந்துள்ளது.