1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (10:09 IST)

உதவி இயக்குனர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்?

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் இருந்து வருகிறார். அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அடுத்து அவர் சூர்யாவோடு இணையும் வாடிவாசல் படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இப்போது அவர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய  விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. இதையடுத்து படம் மார்ச் 31 ஆம் தேதி நாளை மறுநாள் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தன்னிடம் பணியாற்றி வரும் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் செங்கல்பட்டு அருகே தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.