ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:01 IST)

வெற்றிமாறன் அடுத்து படமாக்க உள்ள நாவல்… சம்மதம் தெரிவித்துள்ளாரா விஜய்?

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக ஷூஸ் ஆஃப் த டெட் என்ற நாவலை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து நாவல்களைப் படமாக்குவதை தனது பாணியாக மாற்றிக் கொண்டுள்ளார். இதனால் இப்போது தமிழ் சினிமாவில் நாவல்களுக்கு ஒரு டிமாண்ட் உருவாகியுள்ளது. இப்போது அவர் ஜெயமோகனின் துணைவன் கதையை விடுதலை என்ற பெயரில் படமாக்கி வருகிறார். அடுத்து சி சு செல்லப்பாவின் வாடிவாசலை படமாக்க உள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான நீலிமா கோட்டா எழுதியுள்ள தி ஷூஸ் ஆஃப் தி டெட் (இறந்தவர்களின் காலணி) என்ற நாவலின் உரிமத்தைப் பெற்றுள்ளாராம். இதைதான் அவர் விஜய்யை வைத்து படமாக இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகும் இந்த நாவலை விஜய்யிடம் சொல்லி அவரும் அதற்கு சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.