வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (20:33 IST)

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த 1965ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த் அதன்பின் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரமுகர்கள் உடன் நடித்தார் அவர் கடைசியாக தனுஷ் நடித்த காதல் கொண்டேன் மற்றும் குடியரசு ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
82 வயதான நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அவரது அவர் கடந்த பல ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.