செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (10:33 IST)

ராமாயண சீரியல் புகழ் அரவிந்த் திரிவேதி காலமானார்! – ரசிகர்கள் அஞ்சலி!

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயண தொடரில் நடித்து புகழ்பெற்ற அரவிந்த் திரிவேதி மாரடைப்பால் காலமானார்.

1987ம் ஆண்டில் ராமானந்த் சாகர் இயக்கத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடர் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் அரவிந்த் திரிவேதி. மேலும் இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அரவிந்த் திரிவேதி குஜராத்தில் பாஜக சார்பில் எம்.எல்.ஏவாகவும் இருந்தவர்.

தற்போது 87 வயதாகும் அரவிந்த் திரிவேதி மும்பை காந்திவெலி பகுதியில் வசித்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு திரைத்துறையினர், ராமாயண தொடர் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.