திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (09:56 IST)

வெங்கட் பிரபுவை ஹீரோவாக்கி பிரேம்ஜி இயக்கிய படம்… இதுவரை வெளிவராத ரகசியம்!

இயக்குனர் வெங்கட்பிரபு அவரது தம்பியான பிரேம்ஜி அமரன் இயக்கத்தில் வாண்டட் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார்.

தமிழ் சினிமாவில் இப்போது புகழ்பெற்ற கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரின் எல்லா படங்களிலும் கதை இருக்கிறதோ இல்லையோ அவரின் தம்பி கண்டிப்பாக இருப்பார் என்று சொல்லுமளவுக்கு தம்பிக்கு எல்லா படத்திலும் வாய்ப்புக் கொடுப்பார். அவர் இயக்கிய பார்ட்டி படத்தில் மட்டுமே பிரேம்ஜி நடிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்குனராகும் முன்பே நடிகராக பூஞ்சோலை என்ற படத்தில் அவரின் அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. அதே போல அவரைக் கதாநாயகனாக்கி அவரின் தம்பியான பிரேம்ஜி அமரன் வாண்டட் என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தொடங்கினார். அந்த படத்துக்கான ஒரு பாடல் பதிவும் நடந்தது. ஆனால் சில பல காரணங்களால் அந்த படம் நின்றுபோனது. இதனால் தன்னை ஹீரோவாக்கிய தம்பிக்கு நன்றிக்கடனாகதான் எல்லா படங்களிலும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து வருகிறார் போல வெங்கட்பிரபு.