செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (18:52 IST)

வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ அப்டேட் தந்த ’மன்மதன்’ நடிகர்!

வெங்கட்பிரபுவின் ‘மன்மதலீலை’ அப்டேட் தந்த ’மன்மதன்’ நடிகர்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக்கிய மன்மதலீலை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை மன்மதன் படத்தில் நடித்த சிம்பு சற்றுமுன் வெளியிட்டுள்ளார்
 
இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தின் நாயகன் அசோக் செல்வன், நாயகி சம்யுக்தா ஹெக்டே ஆகிய இருவரும் கொடுக்கும் அழுத்தமான லிப் கிஸ் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது 
 
இந்த படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
மாநாடு என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை அடுத்து வெங்கட் பிரபுவின் அடுத்த படம் வெளியாவதால் இந்த படமும் நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது