ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 22 ஏப்ரல் 2024 (16:19 IST)

சன் டிவி பெயரை எப்போது தமிழாக்கம் செய்வீர்கள்..?. முதல்வருக்கு தமிழிசை கேள்வி..!!

Tamilsai Stalin
உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை எப்போது தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அகில இந்திய வானொலிக்கு ஆகாஷவாணி என்ற சமஸ்கிருத பெயர் வைப்பதா என்ற கேள்வி கேட்கும் திரு.ஸ்டாலின் அவர்களே…. ஆகாஷவாணி என்ற பெயர் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்திருந்தே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
எப்போது உங்கள் குடும்ப தொலைக்காட்சியான சன் டிவி என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்யப் போகிறீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். DD பொதிகை என்ற பெயரை DD தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து தமிழுக்கு தானே பெருமை சேர்த்துள்ளார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

 
காவி என்பது தியாகத்தின் வண்ணம் என குறிப்பிட்டுள்ள அவர், நம் பாரத தேசத்தின் தேசியக்கொடியில் முதன்மை வாய்ந்தது காவி என்று கூறியுள்ளார். அந்த வண்ணத்தில் இலச்சினை மாற்றுவது தவறில்லையே என்று தமிழிசை சௌந்தரராஜன்  குறிப்பிட்டள்ளார்.