திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (09:34 IST)

யோகி பாபுவை கதாநாயகனாக்கும் செல்வராகவனின் உதவியாளர்!

செல்வராகவனின் உதவி இயக்குனர் லதா யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

செல்வராகவனின் உதவியாளர்களான மித்ரன் ஆர் ஜவஹர் மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் இயக்குனராக உருவாகி படங்களை இயக்கியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாக வேறு யாரும் அந்த பட்டறையில் இருந்து வேறு எந்த இயக்குனரும் வரவில்லை. அந்த குறையை போக்குவதற்காக இப்போது லதா என்ற இயக்குனர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.