திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (20:48 IST)

ஜிவி.பிரகாஷின் 'அடியே 'பட முதல் சிங்கில் ரிலீஸ்

adiyae
ஜிவி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகி வரும் ’அடியே’ பட முதல் சிங்கில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில்  முன்னணி இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் குமார். இவர், 'அடியே'  படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை  விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்திற்கு ஜஷ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தில், ஜிவி.பிரகாஷுடன் இணைந்து, வெங்கட்பிரபு, கவுரி,மிர்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்த் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்டிருந்த நிலையில், அடியே பட மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கில் 'வாடி செந்தாழினி' என்ற பாடலை படக்குழு தற்போது ரிலிஸ் செய்துள்ளது. சித்ஸ்ரீராம் பாடியுள்ள பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.