செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (10:29 IST)

மாநாடு படத்துக்கே இந்த நிலைமையா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி புலம்பல்!

மாநாடு படம் வெற்றிகரமாக சென்னையில் 75 நாட்களைக் கடந்து ஒரு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

மாநாடு படம் அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது. இதுபோல சிம்புவின் படம் ஒன்று அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது. அதே போல இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் லாபமாக அடுத்த படங்களில் சம்பளம் கணிசமாக ஏறியுள்ளது. திரையரங்கு வருவாய் மூலமாக மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய முதல் சிம்பு படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் 50 ஆவது நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கில் 75 நாட்களைக் கடந்து ஓடி வருகிறது. இதுபற்றி பேசியுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘இன்று 75வது நாள் ‘மாநாடு’. ரோகிணியில் கோலாகலம் காண்கிறது. 75 நாட்கள் ஆகியும் இன்னமும் விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கவில்லை. ஒரு வெற்றிப் படத்திற்கே இந்த நிலைன்னா... மற்ற படங்களின் நிலையை என்ன சொல்ல??! இப்படி இருந்தால் எப்படி தொழில் செய்ய??! நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் போறதுல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்க வைக்குறாங்க...’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.