வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (17:37 IST)

நிஜத்தை எவ்வளவு ஆழமாக புதைத்தாலும் திமிருகிட்டு வெளியே வந்தே தீரும்: ’கஸ்டடி’ டீசர்..!

custody1
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’கஸ்டடி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த படம் மே 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. 
 
காவல்துறை அதிகாரி கேரக்டரில் கம்பீரமாக நாக சைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர் 
 
’கஸ்டடி’ டீசரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதை பார்க்கும்போது இந்த படம் நிச்சயம் ஒரு ஆக்சன் பிரியர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரை வீடியோ இதோ
 
Edited by Mahendran