1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (17:12 IST)

வெங்கட் பிரபு புதிய படம் ஷூட்டிங்..! – தெரியாமல் உள்ளே வந்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் சர்ப்ரைஸாக சிவகார்த்திகேயன் நுழைந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழில் மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை அளித்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நாக சைதன்யாவின் 22வது படத்தை இயக்கி வருகிறார். தலைப்பிடப்படாத இந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.

அப்போது அங்கே எதிர்பாராத விதமாக நடிகர் சிவகார்த்திகேயனும், ராணா டகுபதியும் வந்தனர். பட பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.