வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (09:43 IST)

வேலு பிரபாகரன் இயக்கும் ‘கடவுள் 2’

வேலு பிரபாகரன் இயக்கத்தில் ‘கடவுள் 2’ என்ற படம் உருவாக உள்ளது.
‘வேலு பிரபாகரனின் காதல் கதை’, ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’ போன்ற ‘அந்த’ மாதிரியான படங்களை இயக்கி, நடித்தவர் வேலு பிரபாகரன். இவர்  இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ‘கடவுள்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் மணிவண்ணன், ரோஜா, மன்சூர் அலிகான் ஆகியோரோடு வேலு பிரபாகரனும்  நடித்திருந்தார்.
 
தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‘கடவுள் 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்கிறார். இதன் துவக்க விழா, நாளை மதியம் நடைபெற இருக்கிறது. இதில், பாரதிராஜா, சீமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.