1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2018 (12:54 IST)

அவசியம் கருதியே மெர்சலில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசினேன்; நடிகர் விஜய்

மெர்சல் திரைப்படம் வெளியான போது அப்படத்தில் இடம் பெற்றிருந்த வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் வெளியான படம், 'மெர்சல்'. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் பேசிய ஜிஎஸ்டி உள்ளிட்ட சில வசனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
 
பல நாட்களாக இது குறித்து கருத்து தெரிவிக்காத நடிகர் விஜய், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, காலத்தின் அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும், மெர்சல் திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட பிரச்னைகளுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றியை தெரிவித்துள்ளார்.