திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (13:23 IST)

பாவம் நெல்சன்.. அவரை கிண்டல் பண்ணாதீங்க! – ஆர்.ஜே,பாலாஜி வேண்டுகோள்!

பீஸ்ட் படத்திற்கு பிறகு அதன் இயக்குனர் நெல்சனை பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

தமிழில் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம் “பீஸ்ட்”. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான நிலையில் படம் பலருக்கு பிடிக்கவில்லை.

சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியானபோது இதன் விமான சண்டை காட்சிகள் உலக அளவில் பரிகாசத்திற்கு உள்ளானது. அதை தொடர்ந்து நெட்டிசன்கள் எதற்கெடுத்தாலும் நெல்சனை கிண்டல் செய்வதை வழக்கமாக்கி விட்டனர். பிற படங்கள் நன்றாக இருந்தால் நெல்சனை கிண்டல் செய்வதில் தொடங்கி சினிமா சாராத பிரச்சினைகளுக்கு கூட நெல்சனை வம்பிழுப்பது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி “நெல்சன் ஒரு சிறந்த இயக்குனர். அவருடன் பல நிகழ்ச்சிகளில் நான் பணியாற்றியுள்ளேன். அவரது பெரிய ரசிகன் நான். அவருக்கு பெரிய அளவில் திறமை உள்ளது. நான் கண்டிப்பாக சொல்கிறேன் அவரது எதிர்கால படங்களில் நிச்சயம் உங்களை மகிழ்விப்பார். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.