1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (17:44 IST)

'வீரமே வாகை சூடும்’ பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடிப்பில்  உருவாகி வரும் வீரமே வாகை சூடும்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ’வீரமே வாகை சூடும்’ படத்தின் தீம் மியூசிக்  நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தின் தீம் மியூசிக்கை வெளியிட்டிருந்தார். இது இணையதளத்தில் வைரலானது.

இ ந் நிலையில், வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் வரும் டிசம்பர் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதகுறித்து  நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்துள்ளார்.  இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.