செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (08:51 IST)

விஷால் 31’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: டைட்டில் இதுதான்!

விஷால் 31’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: டைட்டில் இதுதான்!
விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் விஷால் 31 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து விஷால் ரசிகர்கள் இந்த போஸ்டரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் விஷால் 31 வது படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வரும் இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.