சன்னிலியோன் நடிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் இதுதான்
பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஏற்கனவே தமிழில் 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தபோதிலும் தற்போது அவர் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித்திர பின்னணியை கொண்ட இந்த படத்தின் டைட்டில் 'வீரமாதேவி' என்று வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் பாதி டைட்டிலான 'தேவி' என்பதை ஏற்கனவே அறிவித்த படக்குழுவினர் மீதி டைட்டிலை யூகித்து அனுப்புபவர்கள் சன்னிலியோனுடன் செல்பி எடுத்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஏராளமானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் டைட்டிலை யூகித்த நிலையில் தற்போது சன்னிலியோனுடன் செல்பி எடுக்கும் அதிர்ஷ்டசாலி யாராக இருக்கும் என்பது குறித்த அறிய காத்திருக்கின்றனர்
வடிவுடையான் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ளதாகவும், அதற்கு முன்னர் சன்னிலியோனுக்கு குதிரைப்பயிற்சி மற்றும் வாட்பயிற்சி ஆகியவை அளிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்