1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By ஜெ.துரை
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (13:40 IST)

வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் "வீமன்" திரைப்பட கண்ணோட்டம் !

சங்கர் வடிவேல், சிவ சூர்யா பாண்டியன், நல்ல முத்து  ஆகியோரது தயாரிப்பில்  கீரா இயக்கி விஜய் கார்த்தி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம்" வீமன்".


இத்திரைப்படத்தில் வெண்மதி, வாசகர், டாக்டர் பினு, சஷானா, சிவசூர்ய பாண்டியன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ளடக்கிய மலை கிராமத்தின் மக்களுடைய வாழ்வை அவர்களுடைய கலாச்சாரத்தை பண்பாட்டை அந்த மனிதர்களின் அசலான அலைகளைப் பேசும் கலை படைப்பாக வீமன் உருவாகிறது.

யாருமே போக தயங்குகிற அந்த கிராமத்திற்கு ஆசிரியராக தங்கி அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க கீழ்நாட்டிலிருந்து செல்கிறான் வீமன் அவனை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஊரில் தனித்து வாழும் பழங்குடி பெண் இடும்பி அவனுக்கு துணையாக நிற்கிறாள்.

பின்னர் மெல்ல மெல்ல வீமன் மீது ஏற்படும் பிடிப்பால் அந்த கிராமம் அவனை ஏற்க ஆரம்பிக்கிறது. மாணவர்களுக்கு கல்வி போதித்தானா அந்த மக்கள் ஏன் வெளி ஆட்களை சேர்த்துக் கொள்வதில்லை வீமன் உண்மையாகவே ஆசிரியர் தானா என்று பல கேள்விகளுக்கு விடையாக வீமன் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

படத்திற்கு ஜித் இசை அமைத்துள்ளார். பட தொகுப்பு:விக்னேஷ் முருகன், ஒளிப்பதிவு: லெனின் பாலாஜி

Edited By: Sugapriya Prakash