ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran

காஜல் அகர்வால் நடிக்க வேண்டிய பாத்திரத்தில் தமன்னா!

நடிகை காஜல் அகர்வால் வேதாளம் தெலுங்கு பதிப்பில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. போலோசங்கர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார் என்பதும் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. 

ஸ்ருதிஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இப்போது அவர் விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதில் தமன்னா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காஜல் அகர்வால் விரைவில் சினிமாவை விட்டே விலக உள்ளதாகவும் அதனால்தான் ஒப்புக்கொண்ட படங்களைக் கூட வேண்டாம் என ஒதுக்குகிறாராம்.