1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (14:51 IST)

பாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ரங்கராஜ் பாண்டே!

சுசி கணேசன் இயக்கும் திருட்டுப் பயலே 2 ஆம் பாகத்தில் முக்கிய வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளாராம்.

சுசி கணேசன் இயக்கத்தில் 2017 ஆம் வருடம் ரிலீஸான படம் ‘திருட்டுப் பயலே 2’. இந்தப் படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்த இந்தப் படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் மூலம்தான் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் காலடி எடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் முதல் பாகம் அளவுக்கு வெற்றிப் பெறவில்லை என்றாலும் சுமாராக ஓடியது. இந்நிலையில் இந்த படத்தை இப்போது இந்தியில் ரீமேக் செய்கிறார் சுசி கணேசன். இந்த படத்தின் அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ள நிலையில் தில் ஹை க்ரே (சாம்பல் நிற இதயம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இவர் அஜித்தின் நேர்கொனட பார்வை மற்றும் க பெ ரணசிங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.