ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:34 IST)

16 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த வெயில் கூட்டணி… வசந்தபாலன் & பரத் இணையும் புதிய வெப் தொடர்!

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி என்ற திரைப்படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் அங்காடித் தெரு மற்றும் வெயில் போன்ற தரமான படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய அரவான், காவியத்தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்கள் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் அநீதி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு உருவான வெயில் திரைப்படத்துக்குப் பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் ஜீ5 தளத்துக்காக உருவாக உள்ளது.