வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (09:29 IST)

வசந்த் ரவி நடிக்கும் புதிய படத்துக்கு அரவிந்த் சாமி பட தலைப்பு!

இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் வசந்த் ரவி. அதையடுத்து ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிக்கும் ஏழாவது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் மற்றும் எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சபரிஷ் நந்தா இந்த படத்தை இயக்குகிறார். இவர் ஐரா மற்றும் நவரசா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் மெஹ்ரின் பிரசண்டா கதாநாயகியாக நடிக்க, அனிகா சுரேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மெடிக்கல் பின்னணியில் நடக்கும் குற்றத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு ‘இந்திரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு இதே பெயரில் அரவிந்த் சாமி மற்றும் அனுஹாசன் நடிப்பில் ஒரு படத்தை சுஹாசினி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.