வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (17:33 IST)

இரண்டே காட்சிகள் தான்.. இணையத்தில் வெளியான ‘வாரிசு’ - ‘துணிவு’

thunivu vs varisu
விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று வெளியாகி இரண்டே காட்சிகள் முடிவடைந்த நிலையில் இணையத்தில் கசிந்துவிட்ட தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் அன்றைய தினமே இணையத்தில் லீக் ஆகி வருவது கடந்து சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இந்த குற்றச்செயலை செய்யும் நபர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் காவல்துறையினர் திணறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் இன்று அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் இரண்டே காட்சிகள் மட்டுமே திரையிட்டு முடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது காட்சி தொடங்குவதற்குள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva