அரசியலில் நான்: வரலட்சுமி சரத்குமார் பதில்!!
2012 ஆம் ஆண்டு ரிலீஸான போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன்பிறகு விஷால் ஜோடியாக இவர் நடித்த ‘மத கஜ ராஜா’, இன்னும் ரிலீஸாகவில்லை.
4 வருடங்கள் கழித்து தாரை தப்பட்டை ரிலீஸானது. இந்த வருடத்தில் இதுவரை விக்ரம் வேதா, நிபுணன், சத்யா என இவர் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸாகியுள்ளது.
இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.
நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன் என கூறினார்.