1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (17:56 IST)

ரசிகர்களை மீண்டும் சந்திக்கும் ரஜினி - போர் அறிவிப்பு வெளியாகுமா?

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கவுள்ளார்.



நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து உரையாடினார். அப்போது, சிஸ்டம் சரியில்லை, போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் எனக்கூறி தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். ஆனால், அதன் பின் அவர் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை.
 
கடந்த 12ம் தேதி அவரின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் கொண்டாடினர். போயஸ்கார்டன் வீட்டில் உள்ள அவரது வீட்டின் முன்பு அவரை சந்திக்க ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி தன் அரசியல்  அறிவிப்பை வெளியிடுவார் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினி அவர்களை சந்திக்கவில்லை. இது அவரின் ரசிகர்கள்  மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், வருகிற 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
 
அந்த 6 நாட்களும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அவர் ரசிகர்கள் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில், ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை நிச்சயம் வெளியிடுவார் என அவரின் நண்பரும், காந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.