1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2017 (11:46 IST)

ரஜினி அரசியலுக்கு வர வேண்டி ரசிகர்கள் தங்கத்தேரோட்டம் - வீடியோ

ரஜினி அரசியலுக்கு வரவேண்டியும், தமிழக முதல்வராக வேண்டியும் கரூரில் ரஜினி ரசிகர்கள் மாரியம்மனுக்கு தங்கத்தேர் இழுத்த வீடியோ வெளியாகியுள்ளது.


 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 67 வது பிறந்த தினம் நாடு முழுவதும், உலகம் முழுவதும் அவர்களுடைய ரசிகர்களால் 12 ம் தேதி காலை முதல் கொண்டாடப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், கரூர் மாவட்ட ரஜினி காந்த் ரசிகர் மன்றம் சார்பில், கரூர் மாரியம்மன் கோயிலில் தங்கத்தேரோட்டம் நடத்தினர். ரஜினி காந்த் ரசிகர்கள் ராஜா, கீதம் ரவி ஆகியோர் உள்பட சுமார் 40க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு விரைவில் வரவேண்டியும், தமிழக முதல்வராக வேண்டியும், கரூர் மாரியம்மன் கோயிலில் தங்கத்தேரோட்டம் நடத்தினர்.
 

- சி.ஆனந்தகுமார்