தள்ளிப்போன சிம்பு படம்: எப்போதான் ராஜாவா வருவீங்க..?
நடிகர் சிம்பு சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகா ஹிட்டான அத்தாரின்டிகி தாரேதி என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால், இப்போது படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனராம்.
படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத், நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார்கள்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருக்கிறார்.