ஒரு புருஷனோடு வாழும் பெண்கள் எல்லாம் நல்லவர்களா? வனிதா விஜயகுமாரின் திமிர் பேச்சு
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா ஊடகங்களில் தனது குடும்பப் பிரச்சனைகள் குறித்து ஓப்பனாக பேசி வருவது அவரது குடும்பத்தாரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவிற்கும் நீண்ட காலமாக பிரச்சனை இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு எடுத்த வனிதா, காலி செய்ய மறுப்பதாக நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் வனிதா விஜயகுமாரை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றினர்.
இதனால் கடுப்பான வனிதா செய்தியாளர்களைடம் தனது குடும்த்தை தரக்குறைவாக பேசினார். நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் தனது தந்தை அவரது மகன் அருண் விஜய் மற்றும் மருமகன் ஹரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடுகிறார்.
நான் 2 திருமணம் செய்துகொண்டதை பெரிது படுத்தி பேசுகிறார்கள். ஒரு புருஷனோடு பல வருடங்கள் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? என கேட்டுள்ளார். இவரது இந்த பேச்சு பல பெண்களை இழுவுபடுத்தும் விதமாக உள்ளது. பல பெண்கள் வனிதாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அவரது குடும்ப சண்டையில், வனிதாவிற்கு மற்ற பெண்களை கீழ்த்தரமாய் விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.