1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (13:28 IST)

"கார்ஜியஸ்" தென்னிந்திய சூப்பர் ஸ்டார்" - நயன்தாரா வீடியோவை வெளியிட்ட கத்ரீனா கைஃப் !

தென்னிந்திய சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அஜித், விஜய் , ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். மேலும் தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். 

 
இந்நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான கத்ரீனா கைஃப் நயன்தாரா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கத்ரீனா கைஃப் தற்போது சொந்தமாக பிஸினஸ்  செய்து வருகிறார்.  ‘கே’ என்ற  மேக்கப் பிராண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ள அவர் அதற்காக தென்னிந்திய நடிகை நயன்தாராவை போட்டோ ஷூட்டிங்கிற்காக அழைத்திருந்தார். அதற்காக நயன்தாரா மும்பைக்கு சென்றிருக்கிறார். 
 
அப்போது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு "  தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு மிகப்பெரிய நன்றி, தனது பரபரப்பான ஷெட்யூலுக்கு இடையில் "கே" பியூட்டி கேம்பெயினுக்காக மும்பைக்கு வந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். .