1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (07:50 IST)

பாலாவின் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்… கைகோர்த்த சுரேஷ் காமாட்சி!

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் சூர்யா விலகிவிடவே, இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வந்தார்.

இப்போது படத்தின் தயாரிப்பாளர் மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. மாநாடு, ஏழுமலை ஏழுகடல் ஆகிய படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி இப்போது வணங்கான் படத்தின் தயாரிப்புப் பணிகளை ஏற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையிலும் திருவண்ணாமலையிலும் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.