1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (16:44 IST)

வலிமை படத்தின் அதிகாலை காட்சிகள்…. நல்ல செய்தி சொல்லும் திரையரங்குகள்!

வலிமை திரைப்படத்துக்கான சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி வாங்க திரையரங்க உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெற்றதில்லை.

கொரோனா மூன்றாம் அலைக்குப் பிறகு முதலில் ரிலீஸ் ஆகும் பெரிய படமாக வலிமை உள்ளது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து சிறப்புக் காட்சிகள் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகாலை 1 மணிக் காட்சிக்கும் அனுமதி பெறுவது சம்மந்தமாக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.