1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:04 IST)

வலிமை ரிலீஸ் தேதி மாறியதற்கு காரணம் இவர்தானாம்…. பின்னணி என்ன?

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி 2022 பொங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வலிமை. போனி கபூர் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு தொடங்கி வருடங்கள் ஆகியும் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்து வந்ததால் ரசிகர்கள் பலர் அப்டேட் கேட்டு அதை வைரலாக்கி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் போனிக்கபூர் வலிமை திரைப்படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவித்துள்ளார். வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

வலிமை திரைப்படம் முதலில் தீபாவளிக்கு ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்துமஸுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது 2022 பொங்கலுக்கு ரிலீஸாகும் என உறுதியாக அறிவித்துள்ளனர். இதற்கு காரணம் இந்த படத்தை வாங்கியுள்ள விநியோகஸ்தரான மதுரை அன்புச்செழியன்தான் காரணமாம். கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ் செய்தால் பண்டிகைக் கால வசூலுக்கு இணையாக இருக்காது என்பதால் பொங்கலுக்கு மாற்ற சொல்லி கேட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்ல்ப்படுகிறது.