1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:01 IST)

சார்பட்டா தியேட்டருக்கு வராது… பேச்சுவார்த்தை தோல்வி!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலிஸ் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பலதரப்புகளில் இருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்போது திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் மறுபடியும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் பாராட்டுகளைக் குவித்த படமாக சார்பட்டா பரம்பரை இருந்ததால் திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அதற்கான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவனம் திரையரங்க ரிலீஸுக்கான உரிமையை தர மறுத்துவிட்டதால் திரையரங்குகளில் ரிலீஸாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.