1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (16:51 IST)

கமல்ஹாசனின் விக்ரம் வெளியீட்டு தேதி இதுதானா?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது.

நடிகராக இருந்த கமல்ஹாசன் இப்போது அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த படத்தை விரைவாக முடித்து ரிலீஸ் செய்யும் முனைப்பில் கமல் உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு கோடையை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.