தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று: வைரமுத்து
சமீபத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு உட்கார நாற்காலி கூட கொடுக்காமல் தரையில் உட்கார வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பெண் ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதை செய்த ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்வு குறித்து கவியரசர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
பட்டியலினத்துத் தாயொருத்தி
தரையில் வீசப்படுவதா?
அவரென்ன மண்புழுவா?
தலைவியாய்க் கூட அல்ல...
மனுஷியாய் மதிக்க வேண்டாமா?
என் வெட்கத்தில்
துக்கம் குமிழியிடுகிறது.
தேசியக்கொடி அரைக்கம்பத்தில்
பறக்க வேண்டிய
துயரங்களுள் இதுவும் ஒன்று