என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன்: நடிகர் சதீஷ்

siva| Last Modified ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (12:50 IST)
என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன்: நடிகர் சதீஷ்
சமீபத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பெண் ஊராட்சி தலைவர் ஒருவர் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அவருக்கு உட்கார நாற்காலி கூட கொடுக்காமல் தரையில் உட்கார வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் பெண் ஊராட்சி மன்ற தலைவரை அவமரியாதை செய்த ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் ’இதுபோன்ற தவறை என் வாழ்நாளில் நான் எப்போதும் செய்ய மாட்டேன்’ என்று கூறியுள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்


இதில் மேலும் படிக்கவும் :