தஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் - வைரமுத்து
தஞ்சையில் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலைக் கட்டினார். அக் கோயிலில், ஆகம விதிகளை காரணம் காட்டி தமிழ் இரண்டாம் மொழியாக இழிவுறுவதை தமிழ் பற்றாளர்கள் ஏற்க மாட்டார்கள். குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என வைரமுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்ட செய்தவர் தமிழ் மன்னன், கட்டியவர் தமிழ்ச் சிற்பி, கல்சுமந்தவர்கள் தமிழன் அதனால் கோயிலில் தமிழில் தான் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயிரமாண்டு காலமாக சிவனுக்கு தொடர்புடைய தமிழ், தஞ்சை பெருவுடையார் கோவிலின் கோபுரத்தில் ஏறமுடியவில்லை என தன் கருத்தை தெரிவித்து, தமிழில் ஓதினால் தமிழ் அறம் வேண்டுவோர்களில் ஒருவராக தானும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற ஆணை அல்லது தீர்ப்பு வந்தால் தானும் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்குச் சென்று வழிபடுவதாக கூறியுள்ளார்.