வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (19:17 IST)

”அவர் ஒரு சாடிஸ்ட்…” முன்னாள் கணவரை கடுமையாக விமர்சித்த வைக்கம் விஜயலட்சுமி!

பிரபல பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் மூலம் மிகவும் பிரபலம் ஆனார்.  ஆனால் அதற்கு முன்பே அவர் மலையாளத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கவர்ந்த வைக்கம் விஜலட்சுமிக்கும் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும்  திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழும் நிலையில் இப்போது முன்னாள் கணவர் குறித்து விஜயலட்சுமி கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

அதில் “அவர் ஒரு சாடிஸ்ட். எப்போதும் என் குறைகளை பற்றியே பேசி, என் பெற்றோர்களிடம் இருந்து என்னைப் பிரித்தார்.  என்னைப் பாடக் கூடாது என்று சொன்னார். அதனால் நான் எப்போதும் அழுதுகொண்டே இருந்தேன். “ என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.