வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (11:53 IST)

ஹனிமூன் குறித்த கேள்விக்கு வெட்கத்தோடு பதில் அளித்த மஞ்சிமா!

ஹனிமூன் குறித்து கூறிய நடிகை மஞ்சிமா மோகன்!
 
நடிகர் கார்த்திக் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார்.
 
முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  கேரளா நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். 
 
திருமணத்திற்கு பிறகு பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மஞ்சிமாவுடன் நிர்ரூபர்கள் ஹனிமூன் குறித்து கேட்டனர். உடனே வெட்கத்துடன் தற்போது நடித்து வரும் படங்களில் நிறைய வேலைகள் உள்ளது. அதெல்லாம் முடிந்த பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயரில் ஹனிமூன் செல்லவுள்ளோம் என கூறினார்.