திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:46 IST)

துணிவா? இல்லை வாரிசா? – பத்திரிக்கையாளர் கேள்விக்கு வடிவேலு ரியாக்‌ஷன்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

இதையொட்டி பத்திரிக்கையாளர்கள் எந்த பிரபலங்களை சந்தித்தாலும் இந்த இரண்டு படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் எனக் கேட்டு வருகின்றனர். எனவே இப்போது இது ஒரு ட்ர்னட்டாகவே உருவாகியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் முதலில் துணிவு அல்லது வாரிசு எந்த படத்தைப் பார்ப்பீர்கள் எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த வடிவேலு “எனக்கு அதப் பத்தி ஒன்னும் தெரியலயே. எல்லா படமும் நல்லா ஓடணும். தயாரிப்பாளர்கள் நல்லா இருக்கனும். அப்பதான் எல்லாரும் நல்லா இருக்கமுடியும்” எனக் கூறியுள்ளார்.