1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2023 (10:13 IST)

மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் சார்லியா? மாரி செல்வராஜின் மனதில் இருந்த ப்ளான் பி!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் இதுவரை 52 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இதுவரை வடிவேலு நடித்த கதாபாத்திரங்களில் நடித்ததிலேயே இதுதான் உச்சம் என்றும் அதற்காக அவருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மாமன்னன் படத்தை தொடங்கிய போது இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாவிட்டால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்பதற்கு இயக்குனர் சார்லியை மனதில் வைத்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.