ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 ஜூலை 2023 (07:55 IST)

டைரி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்!

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்  இயக்கத்தில் லாரன்ஸ் தன்னுடைய தம்பி எல்வினை கதாநாயகனாக்கி அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. லாரன்ஸ் தன்னுடைய தம்பியான எல்வினை கதாநாயகனாக ஆக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது எந்த நிலையில் அந்த படம் இருக்கிறது என்றே தெரியவில்லை. இந்நிலையில் இப்போது மற்றொரு படத்தில் ராகவா லாரன்ஸும் அவர் தம்பியும் இணைந்து நடிக்க உள்ளனர்.

டைரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இன்னாசி பாண்டியன் இயக்கும் படத்தில் லாரன்ஸ் மற்றும் எல்வின் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை பைவ் ஸ்டார் பிலிம்ஸ் சார்பாக கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.