செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:32 IST)

தூய்மைப்பணியாளருடன் புகைப்படம் எடுத்து கொண்ட வடிவேலு!

vadivelu pannari
நடிகர் வடிவேலு தூய்மைப்பணியாளருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 
 
நடிகர் வடிவேலு தற்போது மைசூர் அருகே படப்பிடிப்பில் இருந்த நிலையில் அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார் 
 
அப்போது வழியில் பண்ணாரியம்மன் கோயில் இருந்ததை பார்த்து அந்த கோவிலில் அவர் சாமி கும்பிட்டார். அப்போது கோவிலில் துப்புரவு வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கி வடிவேலுவின் காலில் விழுந்து வணங்கினார் 
 
உடனே அவரை தூக்கி விட்ட வடிவேலு நன்றாக இருங்கள் என வாழ்த்தியதோடு அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது