40 நாட்களுக்கு பிறகு வீட்டைவிட்டு வெளியே வந்த மீனா: வைரல் புகைப்படம்!
நடிகை மீனாவின் கணவர் சமீபத்தில் இறந்த நிலையில் 40 நாட்களுக்குப் பின்னர் மீனா தற்போது வீட்டை விட்டு வெளியே வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகை மீனாவின் கணவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்
இதனையடுத்து மீனாவுக்கு அவரது குடும்பத்தினர்கலுக்கும் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்
இந்த நிலையில் தற்போது 40 நாட்களுக்கு பின்னர் நடிகை மீனா வீட்டை விட்டு வெளியே வந்து பீச் சென்றுள்ளார். அவருடன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
பீச்சுக்கு வந்த நடிகை மீனாவுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆறுதல் கூறி மன உறுதியுடன் இருக்க அறிவுரை கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது