புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:19 IST)

வடிவேலு பட நடிகை 2வது கணவர் மீது புகார்..

முரளி, வடிவேலு நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தின் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் தன்னை இரண்டாவது கணவன் அடிப்பதாகக் கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள லோகையா தெருவில் வசித்து வந்தனர் நடிகை ராதா(35).

இவர் சுந்தரா டிராவல்ஸ், உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகந நடித்துள்ளார். ஏற்கனவே ஒரு தயாரிப்பாளருடன் அவருக்குத் திருமணமாகி குழந்தை இருந்த நிலையில், கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்தாண்டு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜாவுக்கு எற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ராதாவின் சந்தேகம் கொண்டு வசந்தராஜா அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த நடிகையின் தாயா அவரை திட்டியதாகவும் அவரை அடிக்கச் செய்த வசந்தராஜா முயற்சி செய்தபோத் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் நடிகை ராதா புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.