நயன்தாராவின் அடுத்த படத்தில் ‘வடசென்னை’ நடிகர்!

nayanthara
sivalingam| Last Modified திங்கள், 30 செப்டம்பர் 2019 (19:33 IST)
தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பியாக நடித்தவர் சரண். இவர் தற்போது ‘கே.ஜி.எஃப் 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘நெற்றிக்கண்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க சரண் ஒப்பந்தமாகியுள்ளார்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலன்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது. இந்த படத்தில் சரண், நயன்தாராவுடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் ஒரு படம் என்பதால் இந்த படத்திற்கு பின் சரண் பல படங்களில் ஒப்பந்தமாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது


கிரி கோபாலகிருஷ்ணன் இசையில் கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவில் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் லூக் கென்னி என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.


இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்த ‘சைரா நரசிம்மரெட்டி’ வரும் அக்டோபர் 2ஆம் தேதியும், விஜய்யுடன் நயன்தாரா நடித்த ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி நாளிலும், ரஜினியுடன் நயன்தாரா நடித்த ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :